குருவின் பெருமைகள் சொல்லப் போமோ 1! என் சற்குரு நாதருக்கு சமர்ப்பணம் சற்குரு வணக்கம், என் வாழ்க்கையில் குருநாதர் தந்த மூச்சுப்பயிற்சியினால் பலகாலம் நல்ல அனுபவங்களைப் பெற்றுள்ளேன். சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக என் வேலையின் காரணமாக சென்னையில் இருந்து சோளிங்கருக்கு தினமும் போய்வர நேரிட்டது. காலை 3.30 மணிக்குப் புறப்பட்டுப் போய் கோடம்பாக்கத்திற்கு இரவு 9.00 மணிக்கு வந்து சேருவேன். தொடர்ந்து மூச்சுப் பயிற்சி செய்து வந்ததால் சோர்வோ, தளர்வோ எனக்கு ஏற்படவில்லை. “ஹைட்ரோசில் ஹிரண்யா” என்ற குடற்புண் நோயால் சாப்பிடவும், தூங்கவும் முடியாமல் கஷ்டப்பட்ட பொழுது “ஐயா” தந்த ஊதுமுறைப் பயிற்சியினால் பூரண குணம் அடைந்துள்ளேன். என் தந்தை தனது 86 வது வயதில் ஆறுமாதம் படுத்த படுக்கையாக கிடந்து துன்புற்றார். ஐயா, எங்கள் இல்லத்திற்கு வந்து மூச்சுப்பயிற்சி தந்த பின் அதைப்பிடித்துக் கொண்டு என் தந்ைத அவரது இறுதி நாட்கள் வரை வலி, வேதனை, துன்பங்களை அனுபவிக்கவில்லை. படுக்கைப்புண் போன்ற பாதிப்பும் அவருக்கு ஏற்படவில்லை. கடைசிவரை அமைதியாக நல்லவண்ணம் இருந்தார். முதியோர் படும் துயரத்திற்கு “ஊுதுமுறை” என்பது ஒரு நல்ல மருந்து என்று கூறலாம். ஐயாவுக்கு நன்றி.